கட்சிக்காக இழந்த சிறுநீரகத்தைத் திருப்பிக் கொடுத்தால் எம்.பி. பதவி ராஜினாமா- அமர்சிங்

Subscribe to Oneindia Tamil

Amar Singh
காஸிபூர் (உ.பி.): சமாஜ்வாடிக் கட்சிக்காக நான் செய்த தியாகங்கள் மிகப் பெரியவை. எனது சிறுநீரகங்களைக் கூட இழந்துள்ளேன். அவற்றைத் திருப்பிக் கொடுத்தால், நான் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தடாலடியாக கூறியுள்ளார் அமர்சிங்.

காஸிபூர் அருகே உள்ள மத்கவா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமர் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடிக் கட்சிக்காக 14 ஆண்டுகள் உழைத்தேன். எனது சிறுநீரகங்களையும் கூட இந்தக் கட்சிக்காக தியாகம் செய்து விட்டேன்.

அப்படிப்பட்ட என்னை கட்சி நடத்திய விதம் சரியல்ல. நான் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் சமாஜ்வாடிக் கட்சியினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தலைவர் (முலாயம்) முதலில் எனது சிறுநீரகங்களைத் திருப்பிக் கொடுக்கட்டும். உடனே நான் பதவி விலகி விடுவேன் என்றார் அமர்.

இப்போதுதான் வலி தெரிகிறதா?: காங். கிண்டல்

இதற்கிடையே, உ.பி. முதல்வர் மாயாவதியை முன்பு முலாயம் சிங் யாதவ் அவமானப்படுத்தியபோது அவர் பட்ட துன்பமும், வலியும், இப்போது தனக்குப் புரிவதாக அமர் சிங் பேட்டி அளித்ததை காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் உ.பி. மாநிலப் பொறுப்பாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,

மாயாவதி பட்ட வலியை உணர்ந்து கொள்ள அமர் சிங்குக்கு இவ்வளவு காலமாகி விட்டது ஆச்சரியமாக உள்ளது. முலாயம் சிங் யாதவை அவரது சொந்த மண்ணிலேயே எதிர்க்க அமர்சிங் துணிந்திருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஒரு அரசியல்வாதியின் செல்வாக்கை, மக்கள் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். எனவே முதலி்ல் தேர்தலில் நின்று அமர்சிங் தன்னை நிரூபிக்கட்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+