ஆந்திராவில் மீண்டும் படகு விபத்து: ஒருவர் பலி - 10 பேர் மாயம்
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து நேற்று 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பலர் காணாமல் போனார்கள்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல் துறையினரும், மீனவர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தண்டா ஏரியில் நாட்டுப்படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 12 முதல் 14 பேர் அந்த படகில் பயணித்ததாக தெரிகிறது. படகு கவிழ்ந்த பின்னர் அதில் இருந்த இருவர் மட்டும் தப்பி கரை சேர்ந்து விட்டனர்.
மீதமுள்ளவர்களில் ஒருவரின் சடலத்தை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். ஆனால் 10 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.












Click it and Unblock the Notifications