கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
ரோதக் (ஹரியானா): ஹரியானா மாநிலம், ரோதக்கில் திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றெடுத்த தம்பதியரை சகோதர, சகோதரியாக வாழ வேண்டும் என கிராம பஞ்சாயத்து கிறுக்குத்தனமான தீர்ப்பை அளித்துள்ளது.
ஹரியானாவின் ஜாட் சமூக அமைப்பின் இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கவிதா மற்றும் சதீஷ் தம்பதியர்.
இந்த இரு பிரிவினரும் அண்ணன், தங்கை முறையில் வருவார்களாம். இதையடுத்து இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்த கவிதாவும், சதீஷும், கணவன் மனைவியாக வாழ முடியாது என ரோதக் அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்து அறிவித்துள்ளது.
குழந்தைக்கு கவிதா காப்பாளராக இருக்கலாம் என்றும் சதீஷின் குடும்ப சொத்தில் இருந்து ஒரு பகுதியை குழந்தை அனுபவிக்கலாம் என்றும் பஞ்சாயத்தார் தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால் இந்த முடிவை சதீஷ் - கவிதா தம்பதிகள் நிராகரித்துள்ளனர். தாங்கள் கணவன், மனைவியாக சேர்ந்தே வாழ்வோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications