விடுதலைப் பின்னர் சமூக சேவை புரிய விரும்பும் நளினி

Subscribe to Oneindia Tamil

Nalini
டெல்லி: விடுதலை கிடைத்தால், தனது வாழ்நாளை சமூக சேவை செய்து கழிக்கப் போவதாக நளினி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆண்டு காலமாக வேலூர் மகளிர் சிறையில் அடைபட்டுள்ளார் நளினி. தான் இத்தனை காலம் பட்ட சித்திரவதை போதும், இனியாவது கருணை காட்டி விடுவியுங்கள் என்று அவர் கோரி வருகிறார்.

அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என சிறை ஆலோசனைக் கமிட்டி தமிழக அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் இதுவரை நளினி விடுதலை குறித்து உறுதியாகத் தெரியவில்லை. சோனியா காந்தியின் கருத்துக்காக தமிழக அரசு காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தனது வழக்கறிஞர் துரைசாமி மூலம் நளினி அளித்துள்ள பேட்டியில் தான் சமூக சேவையாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து துரைசாமி கூறுகையில், விடுதலை செய்யப்பட்டால் மீ்ண்டும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப நளினி விரும்பவில்லை. மாறாக பெண்கள் நலனுக்காக உழைக்க விரும்புகிறார்.

ஒரு சமூக சேவகராக மாற வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும். ஏழைகளுக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் சேவையாற்ற அவர் விரும்புகிறார்.

2008ம் ஆண்டு பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு வந்தபோது, நளினியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது என்றார் துரைசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+