ஹக்கீமுல்லா மசூத் கொல்லப்பட்டதாக தகவல் - விசாரிக்கிறது பாக். ராணுவம்
இஸ்லாமாபாத்: அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மசூத் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விசாரித்து வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை ஹக்கீமுல்லா கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இரண்டு முறையும் அதை ஹக்கீமுல்லாவே மறுத்திருந்தார்.
ஆனால் தற்போது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த ஹக்கீமுல்லா இறந்து போய் விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அத்தார் அப்பாஸ் கூறுகையில், பாகிஸ்தான் வட மேற்குப் பகுதியில் உள்ள எங்களது உளவாளிகள் மூலம் இந்த செய்தி உண்மையா என்பதை விசாரித்து வருகிறோம் என்றார்.
ஒரக்சாய் பழங்குடியினப் பகுதியில் காயமடைந்த நிலையில் ஹக்கிமூல்லா உயிரிழந்ததாக பாகிஸ்தான் டிவி செய்திகள் கூறுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மசூத் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தெற்கு வசிரிஸ்தானல் ஜனவரி 14ம் தேதி நடந்த அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் மசூத் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications