வட இந்தியர்கள் மீதான தாக்குதல் - ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
ஜபல்பூர்: மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டித்துள்ள ஆர்.எஸ்.எஸ். மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாதுகாப்பார்கள் என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவையும் அது கண்டித்துள்ளது.
இதுகுறித்து ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் கூறுகையில், வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசுவோருக்கு எதிரான போராட்டங்கள் மகாராஷ்டிராவில் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. இந்த பூசல் மேலும் பரவாமலும், வட இந்தியர்கள் மீதான தாக்குதலை தடுக்கவும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.
மொழி அடிப்படையில் பேதம் பார்ப்பதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றே என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தாகும் என்றார்.












Click it and Unblock the Notifications