பென்னாகரம் இடைத் தேர்தல் - அதிமுக கூட்டணி தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து இன்று அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் புகார் மனு அளிக்கவுள்ளனர்.

பெண்ணாகரம் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. முறையாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்க்காமல் இருக்க வேண்டும் என்று கோரி கடந்த 28ம் தேதி தமிழக இணைத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கூட்டணிக் கட்சிகள் மனு அளித்தன.

அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை சந்தித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மனு கொடுக்கவுள்ளனர்.

இதற்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் வேட்டவலம் மணிகண்டன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூது உட்பட எட்டு தலைவர்கள் இன்று டெல்லி சென்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+