கோவை புறப்பட்ட பாரமவுன்ட் விமானத்தில் கோளாறு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை புறப்பட்ட பாரமவுன்ட் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
48 பயணிகளுடன் திட்டமிட்ட படி புறப்பட்ட விமானம், ஓடுதளத்தில் இருந்து மேல் எழும்ப முயன்ற போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
ஓடுத்தளத்தில் இருந்த சமயத்திலேயே கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக விமானம் ஓரங்கட்டப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு வேறு தனியார் விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.
நேற்று கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பாரமவுன்ட் விமானம் பறவை மோதியதால் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கியது.
இன்று திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications