2012-க்குள் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும் - எ.வ.வேலு

Subscribe to Oneindia Tamil

பென்னாகரம்: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தப்படி 2012 -க்குள் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும். இதற்கான முதல் கட்டப் பணிகளுக்கு தற்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பென்னாகரம் சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதில் திமுக- வின் தலையீடு சிறிதும் இல்லை. விடுபட்டுள்ள திமுக உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் தான் வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்து வருகிறோம்.

தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தப்படி 2012 -க்குள் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும். இதற்கான முதல் கட்டப் பணிகளுக்கு தற்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்த திட்டம் நிறைவேற்றப்படப் போவதில்லை என தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பென்னாகரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பென்னாகரம் தலைமை மருத்துவமனை மேம்பாட்டுக்கான முதல் கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவின் தோல்விக்கு திமுக காரணமில்லை. பாமக மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை தான் காரணம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+