தொடரும் வாய்ச் சண்டை: சோனியாவை வம்புக்கு இழுக்கும் பால் தாக்கரே!

இதுகுறித்து சாம்னா பத்திரிக்கையில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், மும்பை இந்தியர்களுக்குச் சொந்தமாக இருக்கலாம். ஆனால் அது எப்படி ஒரு இத்தாலி தாய்க்குச் சொந்தமாக முடியும்
காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு முழுமையாக விரக்தி ஏற்பட்டு விட்டது. இந்த விரக்தியால்தான் ஒட்டுமொத்த மராத்தி மக்களையும், மகாராஷ்டிராவையம் அவர் அவமானப்படுத்தியுள்ளார்.
யார் வேண்டுமானாலும் இங்கு வருவதற்கும், எச்சில் துப்புவதற்கும் மும்பை தர்மசாலை கிடையாது என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
மேலும் தனது கட்டுரையில் பால் தாக்கரே கூறுகையில்,
பீகார் மாநிலத்தை சேர்ந்த கமாண்டோக்கள் தான் மும்பையை காப்பாற்றினார்கள் என்று ராகுல்காந்தி கூறினார். கமாண்டோக்கள் வரும் முன்பே தீவிரவாதிகளுடன் போராடி ஹேமந்த் கார்கரே, விஜய் சலாஸ்கர், அசோக் காம்தே, துக்காராம் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
எனவே மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம். யாராவது இந்த உண்மையை சாகடித்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி மராத்தியத்தை காப்போம் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications