மும்பை தாக்குதலில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் பாக்.குடன் பேச்சு- எஸ்.எம்.கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

S M Krishna
டெல்லி: பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக் கதவுகளை இந்தியா ஒரு போதும் மூடவில்லை. மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை மூட வேண்டும். இதைச் செய்தால் தாராளமாக மீண்டும் பேசலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பேச்சுவார்த்தைக்கான கதவுகளை நாம் ஒரு போதும் மூடி வைத்திருக்கவில்லை. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அந்த நாட்டு அரசு மூட வேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு தனது மண்ணை பயன்படுத்த அது அனுமதிக்கக் கூடாது.

மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய அனைத்துத் தீவிரவாதிகள் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்தால் தாராளமாக மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க முடியும் என்றார் கிருஷ்ணா.

இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், செயலாளர் ஜி.கே.பிள்ளை, ஐபி இயக்குநர் ராஜீவ் மாத்தூர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு முடிவடைந்த பின்னர் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

மேலும், ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 நாள் சார்க் மாநாடு திம்புவில் நடைபெறுகிறது. அந்தசமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்துப் பேசக் கூடும் எனவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+