அதிமுகவில் இருந்து திருநெல்வேலி பிரமுகர் திடீர் விலகல்
திருநெல்வேலி: அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக இருந்து வந்த திருநெல்வேலி லக்குமணன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த டி. ஏ. கே.லக்குமணன் கடந்த பல வருடமாக திருநெல்வேலி திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 1993ல் திமுகவில் இருந்து வைகோ தலைமையில் மதிமுக பிரிந்த போது, அதில் சேர்ந்த ஒன்பது திமுக மாவட்டச் செயலாளர்களில் இவரும் ஒருவர்.
மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தபோது திடீரென வைகோவை விமர்சித்து ஒரு புத்தகத்தை லக்குமணன் வெளியிட்டார். இதனால் மதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டது. இதன்பின் அவர் அதிமுகவில் இணைந்தார்.
லக்குமணன் அதிமுகவில் இணைந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் தலைமைக்கழகப் பேச்சாளர் என்ற பதவியை தவிர வேறு பதவி வழங்கப்பட்டவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர், கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications