நெல்லை கலெக்டர் அலுவலக போன்கள் திடீர் செயலிழப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் கலெக்டர், போலீஸ் கமிஷனர் அலுவலக டெலிபோன்கள் நள்ளிரவு முதல் செயலிழந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிககப்பட்டது.

நெல்லை கொக்கிரகுளத்தில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், பாளை தாலுகா அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், அனைவருக்கும கல்வி திட்ட அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், கிளை சிறை, மாவட்ட ஊராட்சி, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் டெலிபோன்கள் அனைத்தும் செயலிழந்தன.

அத்யாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் போலீஸ் கமிஷனர், கலெக்டர் அலுவலத்தை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

கலெக்டர் அலுவலக வாளகத்தி்ல் உள்ள பிற அலுவலகங்களில் பேக்ஸ், இன்டர்நெட் உள்ளிட்ட எந்த சேவையையும் பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பழுதான இடத்தை அடையாளம் காண முடியவில்லை. இறுதியில் நெல்லை தாமிரபரணி ஆற்றுபாலம் அருகே மெயின் ரோட்டில் கேபிள்கள் தீயில் கருகி நாசமாகி இருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தீயில் நாசமான கேபிள்களை அகற்றி விட்டு புதிய கேபிள்களை மாற்றும் பணியில் தொலைதொடர்பு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தகவல் தொடர்பு பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+