என்னையும், சில எம்.பிக்களையும் கொல்ல சதி - சம்பந்தன்

Subscribe to Oneindia Tamil

Sambanthan
கொழும்பு: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக என்னையும், சில எம்.பிக்களையும் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மொழி பேசும் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாக்களித்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அம்பாறையில் கூடியவர்கள் என்னையும் எங்களை சேர்ந்த இன்னும் சிலரையும் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ்மொழி பேசும் மக்கள் தோ்தல் நாளன்று கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர்.

அதற்கு மத்தியில் வாக்களித்த தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எங்களுடைய இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

ராஜபக்சேவுக்கு 7 ஆண்டு பதவிக்காலம்:

இதற்கிடையே ராஜபக்சேவின் 2வது அதிபர் பதவிக்காலம் ஒரு ஆண்டு கூட்டப்பட்டு 7 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

ராஜபக்சே தனது பதவிக்காலம் முடிவடைய 2 ஆண்டுகள் இருந்த போதிலும், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். கடந்த 26-ந் தேதி நடைபெற்ற இத்தேர்தலில், ராஜபக்சே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் சட்டப்படி, ஒருவர் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் முதல் தடவை எந்த தேதியில் பதவி ஏற்றாரோ, அதே தேதியில்தான் அவரது 2-வது தடவை பதவிக்காலம் தொடங்கும்.

எனவே, தனது புதிய பதவிக்காலம் உடனடியாக தொடங்குமா? அல்லது அரசியல் சட்டப்படி, வருகிற நவம்பர் மாதம் தொடங்குமா? என்று ராஜபக்சேவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அவர் கேட்டிருந்தார். இதையடுத்து தலைமை நீதிபதி அசோக டிசில்வா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது.

ராஜபக்சே சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் மோகன் பெரிஸ், அதிபரின் புதிய பதவிக்காலம் நவம்பர் மாதம் தொடங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவில், ராஜபக்சே, நவம்பர் 19-ந் தேதியில் இருந்து 2 வார காலத்துக்குள் மீண்டும் அதிபராக பதவி ஏற்க வேண்டும். அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து அவரது புதிய 6 ஆண்டு பதவிக் காலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 19-ந் தேதிக்கு கிட்டத்தட்ட ஓராண்டு இருப்பதால், ராஜபக்சேயின் பதவிக்காலமும் ஓராண்டு அதிகரிக்கிறது. எனவே, அவர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அதிபர் பதவி வகிப்பார்.

கிளிநொச்சியில் 1,200 தமிழர்கள் மறுகுடியேற்றம்:

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தற்போது முதல் முறையாக 1200 தமிழர்களை ராணுவம் மறு குடியமர்த்தியுள்ளது.

அவர்களுக்கு 6 மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களும், பண உதவியும், விவசாயம் மற்றும் மீன்பிடி சாதனங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் குடியேறும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

முகாம்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரம் தமிழர்களில் ஏற்கனவே 1 லட்சத்து 69 ஆயிரத்து 891 பேர் அவரவர் வீடுகளில் குடியமர்த்தப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிக்காக, ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு, கூடுதலாக 2 கோடியே 85 லட்சம் டாலர் நிதிஉதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+