திமுக ஆட்சியில் புதுப்புது நோய்கள்: அதிமுக குற்றச்சாட்டு
சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதுப்புது நோய்கள் பரவி வருவதாக அ.தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலைத் தடுக்கக் கோரியும் அ.தி.மு.க சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். அப்போது அவர் பேசுகையில்,
'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் டெங்கு காய்ச்சல் பரவியது. அடுத்து பறவைக் காய்ச்சல், தொடர்ந்து சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் என பல நோய்கள் பரவின.
இப்போது தமிழகமெங்கும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நோய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை நகரில் தினமும் படுகொலைகள் நடைபெறுகின்றன. வடசென்னை பகுதியில் கோயில்களில் கொள்ளை நடைபெறுகின்றன.
இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பது காவல்துறைக்கு தெரியும். ஆனால் யாரும் கைது செய்யப்படுவதில்லை.
தமிழகத்தில் நிலவும் இத்தகைய அவலங்கள் நீங்க, மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி மலர வேண்டும். அந்நிலை விரைவில் வரும்' என்றார்.












Click it and Unblock the Notifications