வேலூரில் 'வேலன்டைன் கிருஷ்ணர்' கோவில்!

Subscribe to Oneindia Tamil

Krishna
வேலூர்: காதலர் தினம் நெருங்கும் நிலையில், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 'வேலன்டைன் கிருஷ்ணர்' என்ற பெயரில் ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது.

வரும் 14ம் தேதி 'காதலர் தினம்' கொண்டாடப்படவுள்ளது.

காதல் புனிதமானது என்பது பிரபலமான ஒரு வார்த்தை. ஆனால் தெய்வீகமானது என்று கூறுகிறார் சோளிங்கரைச் சேர்ந்த ஜகன்னாத்.

தனது ஊரில் வேலன்டைன் கிருஷ்ணா என்ற பெயரில் ஒரு கோவில் கட்டி வருகிறார் ஜகன்னாத்.

கோபுரத்துடன் 12 அடி உயரமுள்ள இந்த கோயிலில் ராதையுடன் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு ஒய்யாரமாக கோமாதாவின் மீது சாய்ந்து கொண்டிருப்பது போன்ற சிலையை மூலவராக வைக்க உள்ளனர்.

கட்டிடப் பணிகள் பாதிக்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் மஹா சம்ப்ரோக்ஷணம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கோயிலுக்கு எந்த மதத்தை சேர்ந்தவர்களும் வரலாம், மூலவரை தொட்டு வணங்கலாம் எனக் கூறும் அவர், கிருஷ்ணர் எல்லோராலும் விரும்பப்படும் கடவுளாக திகழ்வதால் அவருக்கு வேலன்டைன் கிருஷ்ணர் என்ற பெயரில் இக்கோயிலை கட்டுவதாக கூறினார் ஜகன்னாத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+