பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயார்!
டெல்லி: மும்பை தாக்குதலுக்கு பின்னர் முடங்கிக் கிடந்த இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகள் தற்போது மீண்டும் துளிர் விட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான சுமூக சூழலை உருவாக்க தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை துவக்க தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் தரப்புக்கு தெரிவித்துவிட்டதாகவும், இஸ்லாமாபாத்தில் இருந்து வரும் பதலைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே அமைதியான மற்றும் பாதுகாப்பான உறவு ஏற்படக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த முடிவை இந்தியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஒப்புக்கொண்டால், இந்தியா வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளையும் விவாதத்துக்கு உள்ளாக்கும் முடிவில் இருப்பதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications