ஆஸியில் இந்திய டாக்சி டிரைவர் கைது: பயணியை தாக்கியதாக வழக்கு

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர், பயணியை தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மெல்போர்ன் பகுதியில் அக்லேண்ட ஸ்ட்ரீட் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க பயணிக்கும் டாக்சி டிரைவருக்கும் நேற்று இரவு 10.30 மணியளவில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த தகராறின் போது பயணியை டாக்சி டிரைவர் காரை ஏற்றி கீழே தள்ளியேதாகவும், சரமாரியாக அடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றி்ல் நேரில் பார்த்தவர்கள் விவரித்ததாக கூறப்பட்டிருக்கும் செய்தியில்,

'டாக்சி டிரைவருடன் ஏற்பட்ட தகராறால் பயணி வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால் டாக்சி டிரைவர் கோபமாக வண்டியை எடுத்து அவர் மீது மோதினார்.

பின்னர் வண்டியில் இருந்த தடி போன்ற ஆயுதம் ஒன்றை எடுத்து பயணியை சரமாரியாக அடித்தார். அதற்குள் பக்கத்தில் இருந்த மற்ற டிரைவர்களும் வந்துவிட்டனர்.

அவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அந்த டிரைவரோடு அவர்களும் சேர்ந்துகொண்டனர். பின்னர் அருகில் இருந்த நிறுவனத்தின் பாதுகாவலர்கள் பயணியை மீட்டனர்' என்று கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணி ஆல்ஃபிரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

32 வயதான இந்திய டாக்சி டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டாக்சி டிரைவரை ஆஜர்படுத்துவோம் என்றும், இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+