தெலுங்கானா போராட்டம் தொடரும்- கூட்டு நடவடிக்கைக் குழு
ஹைதராபாத்: மத்திய அரசு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தாலும், தனி தெலுங்கானாவை அடைவதற்கான போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான கோதண்டராம் கூறுகையில், எங்களது போராட்டம் திட்டமிட்டபடி தொடரும்.
மத்திய அரசின் நிபுணர் குழுவின் நோக்கம், அது என்ன செய்யப் போகிறது என்பது குறித்து தெரிய வந்த பின்னர்தான் அதுகுறித்து நாங்கள் கருத்து தெரிவிப்போம்.
தெலுங்கானாப் பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவை நோக்கி மத்திய அரசு நகரத் தொடங்கியிருப்பதாக உணர்கிறோம்.
நாங்கள் கொடுத்து வரும் நெருக்கடிக்கு மத்திய அரசு அசைந்து கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவே கருதுகிறோம்.
மத்தியில் கூட்டங்கள், விவாதங்கள், ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன.
தற்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை எங்களுக்கு சாதகமானதா இல்லையா என்பது மத்திய அரசு எடுக்கப் போகும் முடிவில்தான் உள்ளது என்றார் கோதண்டராம்.












Click it and Unblock the Notifications