ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - பிப். 18ம் தேதி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட ஐந்து பேர் மீதான சொத்துக் குவிப்பை தள்ளுபடி செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,​​ அவரது தோழி ​சசிகலா,​​ தினகரன்,​​ சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 5 பேர் மீது தமிழக அரசு ​ தொடர்ந்த வழக்கின் விசாரணை,​​ உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில்​ நடந்து வருகிறது.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி ஜெயலலிதா தரப்பில் அவரது வழக்கறிஞர் ​நவநீத கிருஷ்ணன் ஜனவரி 5-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ​ செய்திருந்தார்.

அதில், இந்த வழக்கை தமிழக அரசு முறையாகத் தொடுக்கவில்லை.​ அரசியல் ​ சட்டத்துக்கும்,​​ தனிமனித உரிமைக்கும் எதிராக குற்றம் செய்யாத ஜெயலலிதா மீது ​ வழக்குத் தொடரப்பட்டுள்ளது.​ எனவே,​​ இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ​என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பின் நகல் கிடைக்க தாமதமானதால் ​ வழக்கு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.​

இந்நிலையில் வழக்கு நீதிபதி கேசவ்​ நாராயணா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.​ அப்போது,​​ ​ஜெயலலிதா தரப்பில் நீதிபதி நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.

அப்போது மனுதாரரின் வாதங்கள் தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்த கட்ட விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.​

பதில் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அன்றே தீர்ப்பளிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

எனவே, ஜெயலலிதா மீதான வழக்கு தள்ளுபடியாகுமா என்பது அன்றே தெரிந்து விடும்.

அந்தமான்ஸ டெல்லி-அதிமுகவுக்கு புது நிர்வாகிகள்:

இந் நிலையில் புதுச்சேரி, டெல்லி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அதிமுக அமைப்பு தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைகளின் படி, 6வது கட்டமாக புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய மாநிலங்களின் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, நகர, கிளை, வார்டு வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்த தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அந்தந்தப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+