இந்தியர்கள் மீதான தாக்குதல்-இந்தியத் தூதருடன் 10ம் தேதி கிருஷ்ணா ஆலோசனை

இதற்காக டெல்லி வருகிறார் சுஜாதா சிங். ஆலோசனையின்போது வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவும் உடன் இருப்பார்.
இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், ஏற்கெனவே தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் அந் நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணாவிடம் சுஜாதா சிங் விவரிப்பார் என அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை கிருஷ்ணா 2 முறை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என அப்போது கிருஷ்ணாவிடம் ஸ்மித் உறுதி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆரம்பத்தில் இந்தியா கவலை தெரிவித்து வந்தது. ஆனால் ஆஸ்திரேலியத் தரப்பில் மெத்தனம் நிலவவே சமீப காலமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications