டெலிபோன் ஒயர்களை திருடிய எஸ்ஐ கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்களை வைத்து டெலிபோன் ஒயர்களை திருடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வாலாஜா ரோடு பகுதியில் அறுந்துதொங்கிக் கொண்டிருக்கும் டெலிபோன் கேபிள் ஒயர்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு கும்பல் கேபிள் ஒயர்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களது பெயர் முனியப்பன், சக்தி, முருகேசன், மோகன் என்று தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் சென்னை அரசு பொது மருத்துவமனை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சிட்டிபாபு (57) என்பவர் சொல்லித்தான் நாங்கள் கேபிள் வயர் வெட்டும் திருட்டு தொழில் செய்து வந்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன் பேரில் சிட்டிபாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+