பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தடை கோரி வழக்கு
சென்னை: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு குற்றப் பின்னணியை உடையவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேது என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
1954-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்பதால் அதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டது. இந்த விருதுகளை வழங்குவதற்கு பல்வேறு விதிகளை வகுத்து 15.12.95 அன்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு கடந்த 25.1.2010 அன்று பத்திரிகை செய்தி குறிப்பு மூலம் வெளியிட்டது. அதில், 130 பேர் விருது பெறுகிறவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் குற்ற பின்னணியை கொண்டுள்ளனர். எனவே, இந்த விருது பட்டியலை ரத்து செய்யவேண்டும். விருதுக்கான தேர்வை வெளிப்படையாக சட்ட அடிப்படையில் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை விருது வழங்கப்படும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications