சண்டிகர்: 'பணக்கார' பிச்சைக்காரர் கைது!
சண்டிகர்: அரசாங்க விருந்தினர் மாளிகையில் சொகுசாக சுகபோக வாழ்க்கை நடத்தி வந்த பணக்கார பிச்சைக்காரரை சண்டிகர் போலீசார் பிச்சை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சண்டிகரில் செக்டார் 42ல் உள்ள அரசாங்க கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த ஷங்கர் மேத்தா (52) என்பவரை சண்டிகர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வரும் இவர் இந்த அரசு விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி இருப்பதாகவும், அதற்காக ரூ.6 ஆயிரம் வாடகை செலுத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேத்தாவை கைது செய்தபோது அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், நவீன் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிச்சைக்காரர் தடுப்பு சட்டத்தின் கீழ் மேத்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஜனக்ரானா இதுபற்றி கூறுகையில்,
'போலீசை பார்த்து மேத்தா பயப்படவே இல்லை. நான் பிச்சை எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கைது செய்த பின்னரும் கூறி வருகிறான்.
அரசு விருந்தினர் விடுதியில் தங்கிய அவன் தான் பிச்சைக்காரன் என்பதை மறைத்திருக்கிறான். பணம் கொடுத்ததால் சம்மந்தப்பட்டவர்கள் இவனை அனுமதித்துவிட்டார்கள்.
சண்டிகரில் கொஞ்ச நாளைக்கு தங்கியிருந்து விட்டு, வெயில் சீசனுக்கு சிம்லா போய் பிச்சை எடுக்க அவன் திட்டமிட்டிருந்தான்.
அவனுடைய செல்போனை கைப்பற்றியுள்ளோம். அதன் மூலம் அவன் யார் யாருடன் பேசினான். வங்கிக் கணக்கு ஏதாவது இருக்கிறதா. பணத்தை பதுக்கி வைத்திருக்கிறானா என்ற தகவலை எல்லாம் கண்டுபிடித்துவிடுவோம்' என்றார்.
மேலும், இந்த பிச்சைக்காரர் மேத்தாவை சண்டிகரிலேயே கடந்த 2007ம் ஆண்டில் ஒருமுறை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இவரிடம் கலர் டிவி, விசிடி மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்களை பறிமுதல் செய்தார்கள்.
அதன் பிறகு போலீசிடம் இருந்து தப்பிய மேத்தா, சிம்லா, ஹிமாச்சல பிரதேசம் என பல இடங்களில் பெரிய பெரிய ஹோட்டல் ரிசார்ட்டுகளில் தங்கி வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்பூரைச் சேர்ந்தவர் ஷங்கர் மேத்தா (52). சிறு வயதிலேயே வீட்டில் இருந்த வெளியேறியவர்.
சிறு வயதில் இருந்து நாடு முழுவதும் பல நகரங்களிலும் சுற்றி சுழன்று சளைக்காமல் பிச்சை எடுத்து சம்பாதித்து வந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications