திருச்சி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஜி.கே.வாசன்- விமானத்தைப் பிடிக்க பைக்கில் பறந்தார்

திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மகள் திருமணம் திருச்சி கலைஞர் அறிவலாயத்தில் இன்று காலை நடந்தது. ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பிறகு கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற வாசன் அங்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
திருவானைக்காவல் காவேரி பாலம், கல்லணை சாலை வழியாக திருச்சி- சென்னை பைபாஸ் ரோட்டில் பால்பண்ணை ரவுண்டானா அருகில் கார் வந்த போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன.
இந்த போக்குவரத்து நெருக்கடியில் வாசன் காரும் சிக்கிக்கொண்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்த பிறகு காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து காரிலிருந்து இறங்கிய வாசன், திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜராஜசோழனின் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள், விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.
வாசன் திடீரென மோட்டார் சைக்கிளில் செல்வதைப் பார்த்ததால் மக்களும் சரி, கட்சியினரும் சரி பரபரப்படைந்தனர். வாசன் பைக்கை கட்சிக்காரர்களும் பிந் தொடர்ந்து பைக்குகளில் பறந்தனர். போலீஸாரும் உடன் விரைந்தனர். இதனால் அந்த சாலையே பரபரப்பாகி விட்டது.
டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக சென்று ஜி.கே.வாசனை குறித்த நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெமூச்சு விட்டனர்.
முக்கியமான அரசியல் தலைவர்கள் இதுபோல சாதாரணமான சவாரிகளை மேற்கொள்வதெல்லாம் தமிழகத்தில் அத்தி பூத்தாற் போல நடக்கும் நிகழ்வு என்பதால் மக்களும் வாசன் பைக்கில் செல்வதை வேடிக்கை பார்த்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications