விலைவாசி அடுத்த சில வாரங்களில் குறையும்: பிரதமர்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு துவங்கியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் தலைமையின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உட்பட பல் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் மற்றும் வருகிற பொது பட்ஜெட் ஆகியவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு குறித்து கூட்டத்தில் விவாதம் நடந்தபோது, ஓரிரு வாரத்தில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று பிரதமர் தனது தரப்பு வாதத்தை அழுத்தமாக பதிவு செய்ததாக கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
'விலைவாசியை கட்டுப்படுத்த அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்துபேசி பல்வேறு தேவையான நடவடிக்கைகளை மத்திய செயல்படுத்தியுள்ளது.
அந்த நடவடிக்கைகளின் விளைவுகள் அடுத்து வரவுள்ள சில வாரங்களில் வெளிப்படும் என பிரதமர் காரிய கமிட்டியில் உத்தரவாதம் அளித்திருக்கிறார்' என்றார் மணிசங்கர்.
கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களும் விலைவாசியை கட்டுப்படுத்த கள்ளச் சந்தை செயல்பாட்டை தடுப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசின் ஆலோசனைப் படி மேற்கொண்டிருப்பதாக காரிய கமிட்டி கூட்டத்தில் விவரித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications