பெண் டாக்டரிடம் ஷேர் புரோக்கர் ரூ5 லட்சம் மோசடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: போலி ஆவணம் தயாரித்து பெண் டாக்டரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் பங்கு சந்தை ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பாளை மகாராஜ நகரை சேர்ந்தவர் ராஜகோபால். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி டாக்டர் சங்கரி. ராஜகோபால் அனுப்பும் பணத்தில் சுமார் ரூ.60 லட்சம் வரை பங்குகளில் முதலீடு செய்தார்.

இதற்கான பரிவர்த்தனைகளை நெலலை கைலாசபுரத்தில் உள்ள இந்தியா இன்போ லைன் சர்வீஸ் லிட் என்ற பங்கு சந்தை ஏஜென்சி மூலம் செய்து வந்தார்.

அந்த ஏஜென்சியை சேர்ந்த காஜா மூகைதீன், மதுரை கிளை மேலாளர் மற்றும் மதுரையை சேர்ந்த ரவி உள்ளிட்டோர் தன்னை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக நெல்லை போலீசில் சங்கரி புகார் செய்தார்.

அதன் பேரில் நெல்லை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைக்கபபட்டு விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனியார் பங்கு சந்தை ஏஜென்சி உரிமையாளர் ரவியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+