இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்-தடுக்கக் களம் இறங்கினார் ஷான் வார்னே

இந்தப் பிரச்சினை தொடர்பாக விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், தாக்குதல்களை தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பிரம்பியுடன் வார்னே ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தின்போது என்ன மாதிரியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து வார்னே எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பிரம்பி கூறுகையில், உள்ளூர் ஆஸ்திரேலியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையிலான பதட்டத்தைக் குறைக்க வார்னேவின் சேவைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
நட்புரீதியிலான கிரிக்கெட் போட்டி போன்ற ஏதேனும் இடம் பெறலாம். மேலும் விக்டோரியா மாகாணம் குறித்த சாதகமான விஷயங்கள் பெரிதுபடுத்தப்படலாம்.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்தியர்களிடையே நம்பிக்கையை விதைக்கவும் விக்டோரியா மாகாணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உதவ வார்னே முன்வந்துள்ளார்.
எந்த ஒரு இனத்தினருக்கு எதிரான வன்முறையும் நாம் அனுமதிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. மாறாக கண்டிக்கிறோம். இந்தப் பிரச்சினையை உரிய முறையில் அணுக விக்டோரியா மாகாணம் உறுதியுடன் உள்ளது என்றார் பிரம்பி.
சிவசேனா மிரட்டல் எதிரொலியா...?
ஷான் வார்னே ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த நிலையில்தான் ஷான் வார்னே பதட்டத்தைத் தணிக்க விக்டோரியா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
விரைவில் ஐபிஎல் 3வது போட்டித் தொடர் தொடங்கவுள்ளதால் வார்னே இந்தியா வந்த விளையாட வேண்டியுள்ளது. அதேபோல ஆஸ்திரேலிய வீரர்களும் விளையாட ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் சிவசேனாவின் மிரட்டலால் அவர்கள் இந்தியா வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் பதட்டத்தைத் தணிக்க வார்னேவைக் களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications