கோவில் சொத்து அபகரிப்பு - மண்ணை வாரி தூற்றி வழிபாடு - இந்து முன்னணி நூதன போராட்டம்
திருநெல்வேலி: கோவில் சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது அந்த சிவனே நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவராத்திரி தினத்தன்று மண்ணை வாரித் தூற்றி வழிபாடு நடத்துங்கள் என இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் தெரிவித்தார்.
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் நெல்லையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்பு அவர் சமுதாய தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்து மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இதை நாம் உடனே தடுக்க வேண்டும்.
மத மாற்றத்தால் இந்துக்கள் வெவ்வேறு மதங்களுக்கு செல்லும் அவல நிலமை தமிழகத்தில் நிலவி வருகினறது. இதையும் நாம் கிராமங்கள், தெருக்கள் தோறும் சென்று விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தி தடுக்க வேண்டும்.
நாம் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்காலம். ஆனால், இந்து என்ற உணர்வை மனதில் நிறுத்த வேண்டும்.
இந்து கோவில் சொத்துக்கள் கொள்ளை போகின்றன. அரசாங்கமே அதை தனியாருக்கு விற்பனை செய்கிறது. இது பற்றி தெரிந்தும், மீட்கும் முயற்சியில் இறங்காமல் நாம் முடங்கி கிடக்கின்றோம்.
கோவில் சொத்துக்களை மீட்க நாம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இதன் ஒரு கட்டமாக வரும் சிவராத்திரி தினத்தன்று உங்கள் ஊரில் அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துங்கள்.
சிவன் சொத்தை அபகரித்தவர்கள் நாசமாக போகவேண்டும் என மண்ணை வாரி தூற்றி வழிபாடு நடத்துங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications