ம.பி. ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் வருமான வரி ரெய்டு - ரூ. 3 கோடி ரொக்கம் சிக்கியது

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 3 கோடி ரொக்கப் பணம் கத்தை கத்தையாக சிக்கியது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய பிரதேசம் மற்றும் சதீஸ்கார் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் மாநில உயர் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. மொத்தம் 13 அதிகாரிகள் வீடுகளில் சோதனைகள் நடந்தன.

மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் ஜோஷி வீட்டில் சோதனை நடந்தது. இவரது மனைவி டினுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.

இவர்கள் வீட்டில் சூட்கேஸ்களில் கத்தை கத்தையாக அடைத்து வைத்திருந்த பணத்தை கைப்பற்றினர். மொத்தம் ரூ. 3 கோடி ரொக்கப் பணம் சிக்கியது. மேலும் அவர்கள் ரூ. 2 கோடியே 25 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதேபோல, போபால் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் எம்.ஏ. கான் என்பவர் வீட்டிலும் இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அகர்வால் வீட்டிலும் நடத்திய சோதனையில் அவர்கள் ரூ. 30 கோடி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+