கேபிஎன் பஸ் அதிபர் நடராஜன் வீடு, அலுவலகங்களில் வருமான வரி ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் நடராஜனின் வீடு, அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை துணை இயக்குனர் கருப்பச்சாமி தலைமையில் இந்த அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்களை கேபிஎன் நிறுவனம் பல ஆண்டுகளாக இயக்கி வருகிறது.
தமிழகத்தின் முன்னணி ஆம்னி பஸ் நிறுவனமாகவும் இது திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications