தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமின்போது கிட்டத்தட்ட 70 லட்சம் பேருக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த 14 வருடங்களாக போலியோவை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தோடு போலியோ சொட்டு மருந்து முகாம்களை அரசு நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் இரண்டு தவணைகளாக இது நடைபெறுகிறது. கடந்த 10ம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் நடந்தது.

2வது தவணை சொட்டு மருந்து முகாம் இன்று நடந்தது. சென்னையில் மாநகர மேயர் மா.சுப்ரமணியன், அமைந்தகரையில் தொடங்கி வைத்தார். மாநகராட்சி சார்பில் சென்னையில் 1126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் சுமார் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவை தவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+