ஆஞ்சநேயர் சிலை கிடைத்த இடத்தில் திடீர் பேனர் - பரபரப்பு - பதட்டம்
உடன்குடி: உடன்குடி அருகே திடீர் ஆஞ்சநேயர் சிலையால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு டிஜிட்டல் போர்டு மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் காலை திடீரென்று மண்ணில் பாதி புதைத்த நிலையில் கற்சிலை ஓன்று வெளியே தெரிந்தது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதை பார்த்தபோது அது அஞ்சநேயர் சிலை என்று தெரிய வந்தது. இதையடுத்து திடீர் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.
சுற்றுபகுதியை சேர்ந்த மக்களும் திரண்டு வந்து திடீர் ஆஞ்சநேயரை வழிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வர மூர்த்தி மற்றும் திருச்செந்தூர் தாசில்தார் இளங்கோ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அங்கு சென்று அந்த சிலையை வெளியே எடுத்தனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையாக அனுமதி பெற்று அதன் பிறகு வழிபடுங்கள் என கூறிய தாசில்தார் அந்த சிலையை எடுத்து சென்றார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆஞசநேயர் சிலை இருந்த இடத்தில் ஓரு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது. அதில் கண்டுகொண்ட ஆஞ்சநேயர் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த போர்டு முன்பு பொதுமக்கள் வடை, பாயாசம், வைத்து பூஜை செய்தனர்.
இதையறிந்த மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வர மூர்த்தி, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அந்த போர்டை அகற்ற முயற்சித்தனர்.
அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் திருச்செந்தூர் தாசில்தார் இளங்கோ அங்கு வந்தார். அவர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடததினார். ஆனால் அவர்கள் போர்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் போலீஸ் உதவியுடன் டிஜிட்டல் போர்டு மற்றும் விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை அதிகாரிகள் அள்ளி சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications