திமுக கூட்டணி உடையும்- காங். வெளியேறும்: ஓ.பன்னீர் செல்வம்
தேனி: திமுக கூட்டணி விரைவில் உடையும். அங்கிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார் பன்னீர் செல்வம். அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., அரசின் திரைமறைவு நடவடிக்கைகளால், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. தினமும் இந்த அரசு, கடனுக்கு 20 கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீது 15 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது. தமிழகத்தில் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்வதை, பிரதமர் மன்மோகன்சிங் கண்டித்துள்ளார்.
மின்சார தட்டுப்பாட்டைபோக்க, இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் சட்டபை தேர்தலில் தி.மு.க., தனித்து நின்றால் படுதோல்வியை சந்திக்கும்.
சட்டசபை தேர்தலுக்குள், அந்த கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆவது உறுதி என்றார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications