புதுச்சேரிக்கு கூடுதல் காவல் நிலையங்கள் தேவை- வைத்திலிங்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புதுச்சேரியின் பாதுகாப்புத் தேவைக்காக கூடுதலாக 28 காவல் நிலையங்கள் ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு வைத்திலிங்கம் பேசுகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மிகப் பெரிய சுற்றுலா மையமாக வேகமாக மாறி வருகிறது. இங்கு பெருமளவிலான முதலீடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
எனவே கூடுதல் பாதுகாப்புக்காக 1688 கூடுதல் காவலர்களை நியமிக்கவும், 28 காவல் நிலையங்களை புதிதாக திறக்கவும் உள்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications