ப.சிதம்பரம், உள்துறை செயலாளருக்கு மோடி பாராட்டு

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இன்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில் மோடி பேசுகையில், தீவிரவாதத்தை திறம்பட ஒடுக்குவதில் ப.சிதம்பரமும், ஜி.கே.பிள்ளையும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலங்களிடமிருந்து தீவிரவாதம் தொடர்பான கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதற்கு உடனடியான பதிலையும், நடவடிக்கையையும் இருவரும் வழங்குகின்றனர். இது பாராட்டுக்குரியது.
நமது அண்டை நாட்டின் தான்தோன்றித்தனமான போக்கு காரணமாக நமது பாதுகாப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதை மிகக் கவனமாகவும், தீவிரமாகவும் கருத வேண்டியுள்ளது.
தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை நாம் இரண்டு வழிகளில் கையாளலாம்.
முதலில் அதி நவீன ஆயுதங்கள் நமது பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட வேண்டும். இரண்டாவது உள்நாட்டு படை பலத்தை அதிக்க வேண்டும்.
அதேசமயம், நான் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் வெகுவாக நம்புகிறோம், மதிக்கிறோம் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications