ஜெயராம் விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும்: வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் ஜெயராம் வீடு தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சினிமா நடிகர் ஜெயராம் ஒரு பேட்டியில், தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் கூறியது கண்டனத்துக்கு உரியதாகும். அதிலும், வீட்டு வேலை பார்க்கும் தமிழ் பெண்களை ஏளனம் செய்து அவமதிக்கும் விதத்தில் வார்த்தைகளைக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இருப்பினும், தன் தவறை உணர்ந்து பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் பிரச்சினையை இத்துடன் விட்டு விடலாம்.
நடிகர் ஜெயராம் கூறிய வார்த்தைகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளாமல், கைதானவர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications