மும்பை நன்றாக உள்ளது, நலமாக உள்ளது- அமிதாப்

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியின் தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழாவுக்காக கொச்சி வந்திருந்தார் பச்சன். அவரிடம் சிவசேனா -ஷாருக் கான் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மும்பை ரொம்ப நன்றாக உள்ளது. நலமாக உள்ளது என்றார் பச்சன்.
சிவசேனா, ஷாருக் கான் இடையிலான மோதலைத் தீர்த்து வைக்க முயல்வீர்களா என்ற கேள்விக்கு, மும்பை விவகாரம் குறித்து கொச்சியில் ஏன் பேச வேண்டும்?. இன்று நான் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி கேரள மக்களுக்கு அற்புதமான ஒரு திட்டம் தொடர்பானது. அதைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இந்தத் திட்டத்தை புரமோட் செய்ய மட்டுமே வந்துள்ளேன். அதைப் பற்றி மட்டுமே பேசுங்கள். அதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால் போதும் என நினைக்கிறேன் என்று கூறி சிவசேனா - ஷாருக் மோதல் குறித்து நேரடி பதில் கூறுவதைத் தவிர்த்தார் பச்சன்.
'முண்டு' அணிந்து வந்த அமிதாப்
முன்னதாக மனோரமா டிவியின் சார்பில் நடந்த 2009ம் ஆண்டின் நியூஸ்மேக்கர் விருது வழங்கும் விழாவில் கேரள பாணியில், தங்கக் கரையுடன் கூடிய முண்டு (வேட்டி) அணிந்து கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அமிதாப் பச்சன்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்,நடிகர்கள், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப் பச்சன், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டிக்கு விருதினை வழங்கிக் கெளரவித்தார்.
முண்டுடன் வந்திருந்த அமிதாப் பச்சன் குறித்து மம்முட்டி கூறுகையில், நீங்கள் ஃபார்மல் டிரஸ்ஸில் வருவீர்கள் என்று நினைத்திருந்தேன். அதனால்தான் நான் கூட சூட்டில் வந்தேன். ஆனால் நீங்களோ முண்டில் வந்து விட்டீர்களே என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த அமிதாப், ரோமில் இருக்கும்போது ரோமானியராக இரு என்று பழமொழி உள்ளதே என்று சிரித்தபடி கூற அரங்கமும் சேர்ந்து சிரித்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications