ஆஸி., பாக். வீரர்களுக்கு அனுமதி: விரைவில் முடிவு - பால் தாக்கரே

நேற்று பால் தாக்கரேவை சரத் பவார், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங் மனோகர் ஆகியோர் சந்தித்து இதுதொடர்பாக பேசினர்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து பால் தாக்கரே தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கம்...
ஆஸ்திரேலியா வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்கும் விவகாரம் குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று தன்னை சந்தித்த பவாரிடம், என்னைப் பொறுத்தவரை, விளையாட்டை விட நாடுதான் முக்கியம்.
இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினாராம்.
முன்னதாக, தாக்கரேவை, மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.
மாதோஸ்ரீ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா வீரர்களை சிவசேனா எதிர்த்து வருவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
அதேசமயம், இந்த சந்திப்புக்கு அரசியல் சாயமும் பூசப்படத் தொடங்கியுள்ளது. காரணம், இந்த சந்திப்பு நடந்த கால கட்டம்.
வட இந்தியர்கள் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பாக பாஜகவுடன், சிவசேனாவுக்கு உறவு வேகமாக கசந்து வருகிறது. அதேபோல, காங்கிரஸுடனான கூட்டணியில் பவாரும் சவுகரியமாக இல்லை.
வட இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. அதேபோல, விலைவாசி உயர்வுப் பிரச்சினை காரணமாக பவார் மீது காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான எரிச்சலில் உள்ளனர்.
இந்தப் பின்னணியில் பவார், பால் தாக்கரே சந்திப்பு நடந்திருப்பதால் இதில் அரசியல் காரணம் இருக்கலாமோ என்ற பார்வை எழுந்துள்ளது.
காங். கருத்து..
பால் தாக்கரே, பவார் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், இதில் எந்த அரசியலும் இருப்பதாக காங்கிரஸ் கருதவில்லை. மீடியாவில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, ஒரு அமைச்சராகவோ அல்லது தேசியவாத காங்கிரஸ் தலைவராகவோ பவார், தாக்கரேவை சந்திக்கவிலல்லை. மாறாக கிரிக்கெட் நிர்வாகியாகவே அவர் சந்தித்துள்ளதாக அறிகிறோம்.
ராகுல் காந்தி, சிவசேனா இடையிலான வார்த்தைப் போர் பின்னணியில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் நாங்கள் பார்க்கவில்லை.
ஐபிஎல் போட்டிகளை பிரச்சினையின்றி நடத்துவதை உறுதி செய்வதற்காகவே பால் தாக்கரேவை பவார் சந்தித்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications