உ.பியைச் சேர்ந்தவர்தான் நாட்டின் எதிர்காலத் தலைவர்: மமதா ஆரூடம்!
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவரே நாட்டின் எதிர்காலமாக திகழப் போகிறார் என ரயில்வே அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பேசினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 12 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய போது சோனியா முன்னிலையில் மமதா இவ்வாறு குறிப்பிட்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உ.பி.யின் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தியை மனதில் வைத்துக் கொண்டே, சோனியாவுக்கு 'ஐஸ்' வைப்பது போல மமதா இவ்வாறு பேசியதாக கருதப்படுகிறது.
மமதா தனது பேச்சின் போது குறிப்பிடுகையில், 'அடுத்து வரும் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவர் தான் நாட்டின் எதிர்காலமாக திகழப்போகிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் உத்தரப்பிரதேசம் தவிர்க்க முடியாத முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்று தான் நாட்டை ஆண்டார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் கூட உத்தரப்பிரதேசத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்' என குறிப்பிட்டார் மமதா.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications