மனைவி-குழந்தை கழுத்து நெறித்து கொலை-கணவன் கைது
கும்மிடிப்பூண்டி: படுக்கையில் தூங்குவது போல நடித்து, இரவில் மனைவி மற்றும் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கன்னம்பாக்கத்தை சேர்ந்த கவுதமி (22) மற்றும் பொன்னேரி அருகே உள்ள வேம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
ஜெய்சங்கர் சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். கவுதமிக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்துக்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி, குழந்தை பெற்ற பிறகும் ஜெய்சங்கர் பார்க்க செல்லவில்லை. அவரது குடும்பத்தினரும் சென்று பார்க்கவில்லை.
கூடுதலாக 40 பவுன் நகை தந்தால்தான் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வேன் என்று ஜெய்சங்கர் நிபந்தனை விதித்தார்.
உறவினர்கள் சமரசம் செய்தும் ஜெய்சங்கர் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு ஜெய்சங்கர் திடீரென மாமியார் வீட்டுக்கு சென்றார். அவர் மனம் மாறி வந்துவிட்டதாக அனைவரும் மகிழ்ந்தனர். இரவில் கவுதமியும், ஜெய்சங்கரும் குழந்தையுடன் ஒன்றாக படுத்துத் தூங்கினர்.
இன்று காலை கவுதமி-ஜெய்சங்கர் தங்கியிருந்த அறைக் கதவை காபி கொடுப்பதற்காக மாமியார் தட்டினார். ஆனால் யாரும் திறக்கவில்லை.
பின்னர் கவுதமின் அண்ணனும் சேர்ந்து தட்டிய பின், திடீரென கதவைத் திறந்துகொண்டு ஜெய்சங்கர் அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டார்.
உள்ளே சென்றுபார்த்தபோது கவுதமியும், குழந்தையும் இறந்து கிடந்தார்கள். உடனடியாக ஜெய்சங்கரை துரத்திப்பிடித்த கவுதமியின் அண்ணன், அவரை தனியறையில் பூட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இரவில் சல்லாபம் செய்வது போல நடித்து மனைவியை கழுத்தை நெரித்து ஜெய்சங்கர் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. குழந்தையையும் அவர் மூச்சை அடக்கி கொலை செய்துவிட்டதாக வீட்டில் இருந்தவர்கள் கூறினர். போலீசார் ஜெய்சங்கரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications