புதிய இரண்டு ரூபாய் நாணயம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது.

கண் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் ​(1809 - 2009) 200 வது பிறந்தநாள் விழாவை நினைவுகூரும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

27 மில்லி மீட்டர் விட்டம்,​​ 5.62 கிராம் எடை அளவுடன் துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய நாணயம்.​ இதில் 83 சதவீதம் இரும்பும்,​​ 17 சதவீதம் குரோமியமும் கலக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும்.​ மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.​ படத்தின் கீழ்புறம் அவரது பெயர் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டுள்ளது.

முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு இணை கோடுகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும்.​ நடுப் பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் 2 என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.

மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல்களை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம்.​ மாஜி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+