இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு-ஏப்ரலில் தேர்தல்

செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார் ராஜபக்சே. இதையடுத்து தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய நாடாளுமன்றம் ஏப்ரல் 22ம் தேதி கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 196 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் தவிர 29 பேர் அரசியல் கட்சிகளின் சார்பில் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு- ரணில்
இதற்கிடையே, நாட்டை பிளவுபடுத்தும் வகையில் நடந்து வரும் ராஜபக்சே மீது வழக்கு தொடரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
டெல்லி வந்திருந்த ரணில் விக்கிரமசிங்கே, பொன்சேகாவின் அதிரடிக் கைதைத் தொடர்ந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை வழியாக கொழும்பு கிளம்பினார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை ராணுவம் இரவோடு இரவாக சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக என் நண்பரும், மத்திய வெளியுறவு துறை அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்க தான் டெல்லி வந்தேன்.
பொன்சேகா விஷயத்தில் இந்தியா உதவும் என நம்புகிறேன்.
நான் கொழும்பு சென்ற பின் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து அவரது விடுதலை குறித்து ஆலோசனை நடத்துவோம். ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
பொன்சேகாவை விடுதலைச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications