முலாயம் சிங் யாதவ் ஒரு பச்சைப் பாம்பு - அமர்சிங்
டெல்லி: மதச்சார்பற்ற தலைவர் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் பச்சைப் பாம்புகளைப் போல. போலியான இந்தத் தலைவர்களுக்குப் பதில் முஸ்லீம்களை நேரடியாக எதிர்க்கும் பால் தாக்கரே, கல்யாண் சிங் போன்றவர்கள் ஆபத்தில்லாதவர்கள் என்று முலாயம் சிங்கை மறைமுகமாக பச்சைப் பாம்பு என்று சாடியுள்ளார் அமர்சிங்.
டெல்லியில் நடந்த இந்திய முஸ்லீம் அரசியல் கவுன்சில் கருத்தரங்கில் அமர்சிங் பேசுகையில், முலாயம் சிங்கை இவ்வாறு கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், நான் கொள்கை ரீதியாக கல்யாண்சிங்கை ஆதரிக்கவில்லை. ஆனால், முலாயம் சிங்குடன் ஒப்பிடுகையில் கல்யாண் சிங் பரவாயில்லை என்பது எனது கருத்து.
கல்யாண் சிங், பால் தாக்கரே போன்றவர்கள் பகிரங்கமாக முஸ்லீம்களை எதிர்க்கிறார்கள். இவர்கள் பெரிய அளவில் ஆபத்தில்லாதவர்கள்.
ஆனால், மதச்சார்பற்ற தலைவர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டு முஸ்லீம்களின் முதுகில் குத்துபவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள்.
செடிகளுக்குள் மறைந்திருக்கும் பச்சைப் பாம்புகளுக்குச் சமமானவர்கள் இவர்கள் என்றார் அமர் சிங்.












Click it and Unblock the Notifications