சென்னை கல்லூரியில் மாணவி தற்கொலை: ஈவ்டீசிங் காரணமா?

செங்கல்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் நடராஜனின் மகள் பிரேமலதா (18). இவர் வண்டலூரில் உள்ள கிரசென்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 5ம் தேதி காலையில் பிரேமலதா வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். காலையில் ஆய்வகத்தில் வகுப்பு நடந்தது. அப்போது பிரேமலதா ஆசிட் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆசிட் குடித்ததால் கிட்னி செயலிழந்து ரத்த ஓட்டமும் குறைந்தது.
கடந்த 4 நாட்களாக கோமா நிலையில் இருந்த பிரேமலதா நேற்று பரிதாபமாக இறந்தார். பிரேமலதா இறந்ததை பார்த்து அவரது தந்தை நடராஜன் மற்றும் தாய், உறவினர்கள் கதறி அழுதனர்.
அதே கல்லூரியில் பிரேமலதாவின் அண்ணன் சசிகுமார் படித்து வருகிறார். தங்கையின் தற்கொலை பற்றி அவர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரில், 'எங்கள் கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் கடந்த 2 மாதமாக என் தங்கையை ஈவ்டீசிங் செய்து வந்துள்ளார்.
மிகவும் மனவருத்தம் அடைந்து எங்கள் வீட்டில் சொல்லி அழுதார். நான் அந்த மாணவரை கண்டித்தேன். ஆனாலும் அவர் கேட்கவில்லை. மறுநாள் என் தங்கை கையை பிடித்து இழுத்து திட்டி இருக்கிறார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த என் தங்கை தற்கொலை செய்துள்ளார்' என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications