பல்லடம் அருகே நூற்பாலையில் தீ: ரூ.3 கோடி நாசம்
பல்லடம்: பல்லடம் அருகே நூற்பாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோட மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் தண்டபானி என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. அங்கு நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நூற்பாலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிவதை அறிந்த பணியாளர்கள் அலறிஅடித்து ஓடிவந்தனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து, 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் ஆலையில் இருந்து 21 எந்திரங்கள், நூல், பஞ்சு என சுமார் 3 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
மூன்று ஊழியர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications