நாட்டின் உணவுப் பண வீக்கம் 18 சதவீதத்தை வேகமாக நெருங்குகிறது!!

உணவுப் பண வீக்கம் ஜனவரி மாத இறுதியில், 17.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு, பருப்பு வகைகளின் கடுமையான விலை உயர்வு காரணமாக பண வீக்க அளவும் கடுமையாக உயர்ந்துல்ளது.
இருப்பினும் விரைவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று அரசு குருட்டுத்தனமான நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஜனவரி 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப் பண வீக்கம் 0.38 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணை போன்றவற்றை இறக்குமதி செய்ய தொடர்ந்து வரி விலக்கு அளிக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் பண வீக்க விகிதம் 20 சதவீதமாக இருந்தது. பின்னர் அது லேசாக குறையத் தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் அது உயரத் தொடங்கியுள்ளது. விரைவில் அது 20 சதவீதத்தைத் தொடும்.
உருளைக்கிழங்கு விலை கடந்த ஓராண்டில் இருந்ததை விட தற்போது 40.57 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல பருப்பு வகைகளின் விலை 41.24 சதவீதம் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications