உண்மைக் காதல் ஓகே; ஆபாச காதல் கூடாது: இ.ம.க அறிவிப்பு
கோவை: காதலர் தினத்தன்று பூங்கா மற்றும் பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளை பிடித்து போலீசில் ஒப்படைப்போம்.
ஆனால், உண்மையான காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் தயாராக உள்ளோம் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோவையில் இந்து மக்கள் கட்சியினர் காதலர் தின அட்டையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார்.
தொண்டர்கள் பலர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்தனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், 'காதலர் தினத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்களை தண்டிக்க வேண்டும்.
காதலர் தினத்தன்று பூங்கா மற்றும் பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளை பிடித்து போலீசில் ஒப்படைப்போம். உண்மையான காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் தயாராக உள்ளோம்' என்றார்.












Click it and Unblock the Notifications