மும்பை: 5 வயது சிறுமி கற்பழித்து கொலை-சாக்குப் பையில் உடல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் 5 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற கொடூரன் அந்த சிறுமியின் உடலை சாக்குப் பையில் போட்டு விட்டுச் சென்றுள்ளான்.

மும்பையின் குர்லா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடிப் படியில் வைத்து சாக்குப் பையில் இருந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.

குர்லாவில் உள்ள 7 மாடிக் கட்டடத்தின் மாடிப்படியில் பிப்ரவரி 9ம் தேதி ஒரு சாக்குப் பை கிடந்தது. இதைப் பார்த்தவர்கள் அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் சிறுமியின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் திலீப் சாவந்த் கூறுகையில், செவ்வாய்க்கிழமை அந்த கட்டடத்தில் இருந்தர்கள் சாக்குப் பையைப் பார்த்துள்ளனர். பின்னர் அதைத் திறந்து பார்த்தபோது அதில் சிறுமியின் உடல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தச் சிறுமியை கற்பழித்து பின்னர் கழுத்தை நெரித்துள்ளனர். அதன் பிறகு தலையை சுவரில் வைத்து பலமாக மோதிக் கொலை செய்துள்ளனர் என்றார்.

இதையடுத்து கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கைப் போலீஸார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்தச் சிறுமியின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. வாயைக் கட்டியுள்ளனர். உள்ளாடைகளைக் காணவில்லை.

தங்களுக்குத் தெரிந்த யாரோதான் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும். காரணம், எங்களது மகள் அன்னியர்களிடம் பேச மாட்டாள் என்று சிறுமியின் பெற்றோர் கதறியபடி கூறினர்.

குர்லா பகுதியில், சிறுமிகள் கற்பழிப்பு மற்றும் கொலைகள் நடப்பது தொடர் கதையாகியுள்ளதாம். கடந்த ஆண்டு 7 வயதுக் குழந்தை காணாமல் போனாள். அதேபோல ஆறு மாதங்களுக்கு முன்பு ஆறு வயதுச் சிறுமி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+