ஷாருக்கானுக்கு பாகிஸ்தான் மீது அனுதாபம்: விஎச்பி

இதனால், மும்பையில் ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ் கான் திரைப்படத்தை திரையிட விடாமல் தடுக்கும் சிவசேனாவின் ஆர்ப்பாட்டங்களை விஷ்வ இந்து பரிஷத் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மும்பை மராத்தியருக்கே சொந்தம் என்ற சிவசேனாவின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகராக திகழ்கிறது. எனவே இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானதாகவே கருதமுடியும். எந்தவொரு அமைப்பும், கட்சியும் மும்பைக்கு தனி உரிமை கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை சேர்க்கவில்லை என்பதற்க ஷாருக்கான் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எப்போதுமே பாகிஸ்தான் மீது ஒரு அனுதாபம் இருந்து வருகிறது.
இதுபோன்ற பாகிஸ்தான் அனுதாபிகளை இனிமேலும் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே அவரின் படத்துக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் தவறேதும் இல்லை' என்றார்.
'ஷாருக்-தாக்கரே சந்திப்பை திட்டமிட்டு தடுக்கிறது காங்கிரஸ்':
ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ் கான் திரைப்படம் நாளை (12ம் தேதி) வெளியாகிறது. மும்பையில் இதற்கான முன்பதிவுகள் மும்முரமாக தொடங்கிய வேளையில் சிவசேனா அமைப்பினர் பல முக்கிய தியேட்டர்களையும் அடித்து நொறுக்கினர்.
இதனால் மும்பையின் முக்கிய தியேட்டர்களில் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிரச்னையை சுமுகமாக தீர்க்க சிவசேனா தலைவர் பால்தாக்கரேயுடன் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஷாருக்கான் அறிவித்திருந்தார்.
நேற்று அபுதாபியில் இருந்த ஷாருக்கான், இப்போதும் சிவசேனா தலைவரை சந்திக்க தயாராக இருப்பதாகவும், சமரச தீர்வு காண முன்வருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே, ஷாருக்கான் படத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மாநில அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறோம் என்றும் முதல்வர் அஷோக் சவான் அறிவித்தார்.
இதுகுறித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே இன்று தங்களின் சாம்னா பத்திரிகையில் குறிப்பிடுகையில், 'ஷாருக்கான் என்னை சந்தித்து விடாமல் இருக்க கவனமாக காய் நகர்த்துகிறது ஆளும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு.
நாங்கள் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஷாருக்கானை திசை திருப்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துகிறோம் என முதல்வர் அஷோக் சவான் அறிவிக்கிறார்' என குற்றம்சாட்டியுள்ளார்.
ஷாருக்கானுக்கு ஷில்பா ஆதரவு:
இதற்கிடையே, ஷாருக் கானுக்கு ஷில்பா ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவர் ஷாருக் கானைப் போலவே ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருக்கிறார் என்பது குறி்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. இது அடிப்படை உரிமையாகும். படத்துக்கு ஏன் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த செயல் இந்தி சினிமாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித நேயம் என்ற முறையில் ஷாருக்கானுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வன்முறை வேண்டாம்: அமிதாப்பச்சன் வேண்டுகோள்..
இந்த நிலையில் ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படத்துக்கு தடை செய்ய வேண்டாம், வன்முறை வேண்டாம் என அமிதாப் பச்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, அனைவரும் ஒற்றுமையுடன், அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இதுவாகும். எல்லாம் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆகும். இதற்காக வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications